சிலருக்கு கால்களை அசைக்கும் பொழுது மூட்டு பகுதியில் உள்ள இணைப்பில் ஒருவித கடக்முடக் சத்தம் ஏற்படும்.மூட்டு ஜவ்வு வலிமை இழத்தல்,மூட்டு தேய்மானம்,மூட்டு பகுதியில் அடிபடுதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற ஆட்டுக்கால் சூப் செய்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஆட்டுக்கால் – இரண்டு
2)வெள்ளைப்பூண்டு பல் – 10
3)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
4)சின்ன வெங்காயம் – பத்து
5)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
6)இஞ்சி துண்டு – ஒன்று
7)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
8)தக்காளி பழம் – ஒன்று
9)வர மிளகாய் – இரண்டு
10)கறிவேப்பிலை – ஒரு கொத்து
11)கொத்தமல்லி தழை – சிறிதளவு
12)உப்பு – தேவையான அளவு
13)சீரகம் – ஒரு தேக்கரண்டி
14)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு ஆடுகால் எடுத்து சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து வர மிளகாய்,வர கொத்தமல்லி,கருப்பு மிளகு,சீரகம் ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் குக்கர் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு இடித்த சின்ன வெங்காய கலவையை அதில் போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு வறுத்து அரைத்த பொடியை அதில் கொட்டி வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய ஆட்டுக்கால் துண்டுகளை அதில் போட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.பிறகு ஒன்றை கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்த விட வேண்டும்.
அதன் பிறகு சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து குக்கரை மூடி போட்டு மூன்று முதல் நன்கு விசில் விட வேண்டும்.இந்த ஆட்டுக்கால் சூப்பை வாரம் இருமுறை செய்து பருகி வந்தால் வலுவிழந்த மூட்டு பகுதியில் உறுதியாகும்.ஆட்டுக்கால் சூப் போன்று கோழிக்கால் சூப்பை வாரம் இரண்டு முறை செய்து பருகி வந்தால் மூட்டுகளை வலிமையாகும்.