பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூட்டு சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மூட்டு வலி,மூட்டு தேய்மானம்,எலும்புகள் உரசிக் கொள்ளுதல்,மூட்டு ஜவ்வு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.
சிலருக்கு மூட்டு பகுதியில் கடமுடா சத்தம் கேட்கும்.நிற்கும் பொழுது,நடக்கும் பொழுது மற்றும் ஓடும் பொழுது மூட்டு பகுதியில் ஒருவித சத்தம் கேட்கும்.இது வலி மற்றும் வலி இல்லாத பாதிப்பு என்று இருவகையாக ஏற்படுகிறது.மூட்டு ஜாயிண்ட் பகுதியில் அதிக காற்று இருந்தால் இதுபோன்ற கடமுடா சத்தம் கேட்கும்.
மூட்டு பகுதியில் கடமுடா சத்தம் வர காரணங்கள்:
மூட்டு பகுதியில் தேய்மானம் ஏற்பட்டிருந்தால் மூட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும் பொழுது சத்தம் கேட்கும்.இந்த மூட்டு தேய்மானத்தால் சத்தத்தோடு வலியும் ஏற்படும்.மூட்டு பகுதியில் திரவம் குறைந்தால் கடகட சத்தம் வரும்.
மூடில் காயங்கள் ஏற்பட்டால் வலியுடன் கூடிய கடமுடா சத்தம் கேட்கும்.மூட்டு எலும்புகள் பலவீனமாக இருந்தால் இதுபோன்ற சத்தம் கேட்கும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூட்டு பகுதியில் கடமுடா சத்தம் எழும்பலாம்.காரணம் மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் மூட்டு பகுதியில் இருக்கின்ற ஜவ்வின் ஈரப்பதம் குறைந்துவிடும்.இதனால் கடமுடா சத்தம் வரும்.
மூட்டுகள் அசையும் பொழுது வலியுடன் கூடிய சத்தம் இருந்தால் நீங்கள் நிச்சயம் அலட்சியம் செய்யக் கூடாது.மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.இந்த பிரச்சனைக்கு மருத்துவரின் ஆலோசனை மூலம் வலி நிவாரணி,மாத்திரை மற்றும் மருந்துகள் வாங்கி பயன்படுத்தலாம்.மூட்டு பகுதியில் அதீத வலி மற்றும் கடமுடா சத்தம் வருகிறது என்றால் நீங்கள் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.