நடக்கும் போது மூட்டு பகுதியில் சத்தம் கேட்குதா? அடிக்கடி மரத்து போதல் ஏற்படுதா? காரணமும் உரிய தீர்வும்!!

0
7

நமது உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை தான் மூட்டுப்பகுதி என்கின்றோம்.இந்த மூட்டு பகுதி வலிமையாக இருந்தால் தான் நம்மால் நிற்க,நடக்க,ஓட முடியும்.ஒருவேளை உங்கள் மூட்டு பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் ஜவ்வு தேய்மானம் கண்டால் நிச்சயம் மூட்டு வலி தொந்தரவு ஏற்படும்.

சிலருக்கு நடக்கும் பொழுது மூட்டு பகுதியில் ஓடித்தல் போன்ற சத்தம் கேட்கும்.இந்த மூட்டு பகுதியில் வரக் கூடிய சத்தம் உடல் இயக்கித்தின் தாமதமாக இருக்கலாம்.நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்தல் அல்லது கால்களை தொங்கிய நிலையில் வைத்தல் போன்ற காரணங்களால் மூட்டு வலி,மூட்டு மரத்து போதல் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

பொதுவாக நாம் முழங்கால்களை நீட்டும் போது அல்லது மடக்கும் சமயத்தில் குழிகள் வெடிக்கும் ஒலி ஏற்படும்.இது அனைவரும் சந்திக்க கூடிய சாதராண பிரச்சனை தான்.இதனால் வலி உணர்வு ஏற்படாது.

ஆனால் முழங்கால் பகுதியில் வெடிக்கும் சத்தம் ஏற்படுதல் மற்றும் இதனுடன் வலி,வீக்கம் போன்ற பிரச்சனைகள் சேர்ந்து ஏற்பட்டால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.இது கீல்வாதம்,மூட்டு விறைப்பு,முழங்கால் வலி மற்றும் முழங்கால் உறுத்தல் போன்றவற்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

முழங்கால் பகுதியில் உள்ள தசை நாண்களில் அலர்ஜி,வீக்கம்,வளைந்திருத்தல்,அலர்ஜி போன்ற காரணங்களால் மூட்டு பகுதியில் சத்தம் மற்றும் மரத்து போதல் ஏற்படுகிறது.மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்க ஆரோக்கியமாக உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

மூட்டு எலும்புகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.சைக்கிள் பயிற்சி,உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு இணைப்பு பகுதி வலுப்படும்.மாடிப்படி ஏறும் பொழுது,வேகமாக நடக்கும் பொழுது மூட்டு பகுதியில் வலியுடன் சொடக்கு சத்தம் அல்லது நறக் மறக் போன்ற சத்தங்கள் அதிகளவு கேட்கிறது என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண வேண்டும்.

Previous article30 நாட்களுக்கு முன்பே அலர்ட் கொடுக்கும் ஹார்ட் அட்டாக் சிம்டம்ஸ்!! இது தெரிந்தால் மாரடைப்பு அபாயத்தை தடுத்துவிடலாம்!!
Next articleஆத்து மீனுக்கும் கடல் மீனுக்கும் உள்ள வித்தியாசம்!! எந்த மீன் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?