முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!!

0
157

முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!!

ஒரே நாளில் முகப்பரு கருமை கரும்புள்ளிகள் நீங்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு நிறையவே காரணம் இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை சோப் அல்லது இயற்கை பொருட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

இதனால் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும், ஆனால் இப்படி செய்யாமல் இருந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை தோன்ற ஆரம்பிக்கும்.

அது போல ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் ஆவது பருக வேண்டும். இல்லை என்றால் உள்ளுக்குள் இருக்கும் கழிவுகள் வெளியேற முடியாமல், முகத்தில் இருக்கும் சிறு சிறு துவாரங்கள் வழியே வெளியேற்றப்படும்.

இதனால் முகப்பருக்கள் தோன்றும், பாக்டீரியாக்கள் தொந்தரவும் வரக்கூடும். வெண்புள்ளி, கரும்புள்ளிகளும் தோன்றும். எனவே இத்தகைய பிரச்சினைகளை சரி செய்து முகத்தில் இருக்கும் புள்ளிகளை விரட்டி அடித்து முகத்தை பளபளன்னு ஜொலிக்க செய்ய எளிய அழகு குறிப்பு தகவலை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை

எலுமிச்சை பழம்

செய்முறை:

1: முதலில் தேவையான அளவு முருங்கைக்கீரை எடுத்து அதன் இலைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

2: பிறகு அதனுடன் அரை எலும்பிச்சை பழம் சாறு சேர்த்து மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை நம் முகத்தில் தடவி ஒரு 10-15 நிமிடம் வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு முகத்தை கழுவிட வேண்டும்.

நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கருமை முகப்பரு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்.

இதனை நாம் ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பயன்படுத்த வேண்டும். சில பேரு முகத்தில் சில் ரத்தம் போன்று இருக்கும் அப்படி இருப்பவர்கள் இதனை தடவினால் அது போன்ற பிரச்சினைகள் சரியாகிவிடும்.

இது ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் சேர்ந்து ஒரு சமமான டிப்ஸ் ஆகும். எனவே இதில் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுத்தாது.

Previous article6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!!
Next articleஇளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!