லொக்கு லொக்குன்னு இருமல் வந்து கொண்டே இருக்கிறதா ? அப்போ ஒரு கொய்யா இலையை எடுத்து இப்படி செய்யுங்கள்.. சட்டுன்னு ரிசல்ட் கிடைக்கும்!
காலநிலை மாற்றம்,மாசுபாடு,அலர்ஜி,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட காரணங்களால் இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.சிலருக்கு விடாது இருமல் வரும்.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதோடு தொண்டை பகுதியில் புண்,வலி உள்ளிட்டவை ஏற்படும்.
இந்த தொடர் இருமலை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை பின்பற்றினால் போதுமானது.
தேவையான பொருட்கள்:-
1)கொய்யா இலை
2)தண்ணீர்
3)தேன்
4)மிளகு
செய்முறை:-
சுத்தமான கொய்யா இலை ஒன்று எடுத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இரண்டு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு நறுக்கி வைத்திருக்கும் கொய்யா இலை மற்றும் இடித்த மிளகு தூளை அதில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் சில நிமிடங்களில் இருமல் பாதிப்பு குணமாகி விடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)கொய்யா இலை
2)மஞ்சள்
3)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் 2 கொய்யா இலையை நசுக்கி சேர்க்கவும்.
அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கொய்யா இலை
2)திப்பிலி
3)அதிமதுரம்
4)சுக்கு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கொய்யா இலை,ஒரு திப்பிலி,1/4 தேக்கரண்டி அதிமதுரப் பொடி மற்றும் 1/4 தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வறட்டு இருமல் பாதிப்புக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.