எல்லா பருவ காலங்களிலும் பப்பாளி பழம் கிடைக்கும்.சுவை மற்றும் விலையில் திருப்தி இருப்பதால் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக இது உள்ளது.இந்த பப்பாளி பழத்தை ஏழைகளின் கனி,பழங்களின் தேவதை என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.
உடல் மற்றும் சருமம் ஆகிய இரு ஆரோக்கியங்களையும் காக்கும் பழமான பப்பாளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழத்தில் கரோட்டின் அதிகம் நிறைந்திருப்பதால் கண் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
வயிற்றில் உள்ள கழிவுகள் அகல பப்பாளி பழத்தை சாப்பிடலாம்.வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் பேதி மாத்திரை இல்லாமலேயே மலக் கழிவுகளை வெளியேற்றிவிடலாம்.பப்பாளி பழம் வாயுத் தொல்லையை போக்க செய்கிறது.
வயிறு தொடர்பான பாதிப்புகளில் இருந்து மீள பப்பாளி பழம் சாப்பிடலாம்.பப்பாளி சரும நோய்களை குணப்படுத்துகிறது.உடல் நிறத்தை மாற்ற பப்பாளி பழம் சாப்பிடலாம்.பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பப்பாளி பழம் சாப்பிடலாம்.
இருப்பினும் பப்பாளியை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும்.காலை நேரத்தில் பப்பாளி பழத்தை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.வயிற்றுப் பகுதியில் உப்பச உணர்வு,வயிறு வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக பப்பாளி பழம் சாப்பிட்டால் இதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்படும்.பப்பாளி பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் சூடு அதிகமாகிவிடும்.இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும்.அதிக பப்பாளி பழம் சாப்பிட்டால் வேனல் கட்டி,தோல் புண்கள்,தோல் எரிச்சல் அதிகமாகிவிடும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும்.