உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது.
சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கத்தின் விலை உயர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் வீட்டில் இருக்கக்கூடிய பழைய தங்க நகைகளை விற்பனை செய்து லாபம் ஈட்டலாமா என பலருக்கும் கேள்விகள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக ஒருவர் தன்னுடைய தாத்தாவால் வாங்கப்பட்ட பழைய தங்க நகைகளை விற்பனை செய்ய போவதாகவும் அந்த நகையை விற்பனை செய்யும் பொழுது அதற்காக நிதி துறை அந்த நகையை விற்பனை செய்யும் பொழுது அதற்காக வரிகள் விதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விகளுக்கு நிதி துறையை சார்ந்த ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தின்படி தங்க நகைகளை விற்பனை செய்யும் பொழுது அவற்றின் கால அளவுகளைப் பொறுத்து மூலதன ஆதாயங்கள் என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு விதிக்கப்படும் வரியானது இரண்டு வகைகளில் பிரிக்கப்படுகிறது :-
✓ குறுகிய கால மூலதன ஆதாய வரி
✓ நீண்டகால மூலதன ஆதாய வரி
குறுகிய கால மூலதன ஆதாய வரி :-
நகை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அந்த நகையின் விற்பனை விலையானது குறுகிய காலத்திற்கான ஆதாய வரி விதிப்பின் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.
நீண்டகால மூலதன ஆதாயவரி (12.5%) :-
2001 ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி பழைய தங்க நகைகள் வாங்கியதற்கான செலவு = நீண்டகால மூலதன ஆதாய வரி என்ற ஃபார்முலா படி வரிவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனோடு கூட செஸ் வரியும் நீண்ட கால மூலதன ஆதாய வரியோடு விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.