நம் நாட்டு மருத்துவத்தில் வெட்டு காயங்களை குணப்படுத்த பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.இதில் கசப்பு சுவை நிறைந்த கிரந்தி நாயகம் அதாவது வெட்டுக்காய் செடி காயங்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.
இந்த செடிக்கு சிலந்தி நாயகம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.இந்த செடியின் இலை நீள் வட்டத்தில் இருக்கும்.இதன் பூக்கள் ஊதா நிறத்தில் சிறியதாக இருக்கும்.இந்த வெட்டுக்காய் செடியின் பூக்கள் கிருமிகளை அழிக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கிரந்தி நாயகத்தின் இலையை அரைத்து வெட்டுக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.தழும்புகள் மீது இந்த இலையை அரைத்து பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
சொறி சிரங்கு போன்ற பாதிப்பில் இருந்து மீள வெட்டுக்காய் இலையை அரைத்து பூசலாம்.அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள வெட்டுக்காய் இலையை பயன்படுத்தலாம்.இந்த இலையை அரைத்து சிறிதளவு வெண்ணெய் கலந்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தோல் எரிச்சல்,அரிப்பு இருப்பவர்கள் கிரந்தி நாயகம் இலையை தண்ணீர் விட்டு அரைத்து பூசி குளித்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.இந்த கிரந்தி நாயகம் இலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி தயிரில் கலந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் நீங்கிவிடும்.குடலில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகள் அகல இந்த இலையை அரைத்து சாப்பிடலாம்.
தீக்காயங்கள் மீது இந்த கிரந்தி நாயகம் இலை விழுதை பூசினால் அவை சீக்கிரமாக குணமாகிவிடும்.கண் நோய் குணமாக தினமும் ஐந்து மில்லி கிரந்தி நாயகம் இலை சாறு பருகலாம்.