கவினின் அடுத்த கமிட்மெண்ட் எது தெரியுமா?? அட ஒரே பிஸி தான் இவரு!!

Photo of author

By CineDesk

கவினின் அடுத்த கமிட்மெண்ட் எது தெரியுமா?? அட ஒரே பிஸி தான் இவரு!!

CineDesk

Do you know Gavin's next commitment? This is the only busy!!

கவினின் அடுத்த கமிட்மெண்ட் எது தெரியுமா?? அட ஒரே பிஸி தான் இவரு!!

தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பித்தார் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்தான் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

இவர் அதன் பிறகும் ஒரு சில படங்களில் மட்டுமே பணியாற்றி வந்தார். இதனிடையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று மேலும் ரசிகர்களை கவர்ந்து ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

மேலும் இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வெப் சீரிஸ்க்கு ஆகாசவாணி என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப் சீரிஸை அறிமுக இயக்குனர் ஒருவர் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ்காக மற்ற நடிகைகள் மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.