கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??

Photo of author

By Rupa

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??

நம் கண்களில் ஏற்படும் கண்கட்டி என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்று நோய் ஆகும். இந்த கண்கட்டி தொற்றானது மேல் கண்கள் அல்லது கீழ்கண்களின் இமைகளிலின் கீழ் தோன்றும்.

கண்கட்டி வருதற்கான காரணம் கண்களின் இமைகளின் அடிப்பகுதியில் செபாசகயஸ் சுரப்பிகள் அடைக்கப்பட்டு எரிச்சல், வீக்கம், பாக்டீரியா தொற்று ஏற்படுவதுதான்.

கண்கட்டி ஏற்படுவதற்கான காரணிகள்

கண்கட்டி நோய்கள் வருதற்க்கான சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* கண்கட்டி வருவதற்கான முக்கிய காரணம் அழகு சாதன பொருட்களை அதன் பயன்பாட்டு தேதி முடிந்த பிறகும் பயன்படுத்துவது

* தூங்கச் செல்லும் முன்பு கண்களுக்கு செய்த மேக்கப்பை நீக்காமல் தூங்குவது

* கண்களில் அணியும் காண்டாக்ட் லென்சுகளின் கிருமிகளை நீக்காமல் மறுபடியும் அதை அப்படியே பயன்படுத்துவது

* கைகளை நன்கு சுத்தமாக கழுவாமல் காண்டாக்ட் லென்சுகளை மாற்றுவது

* உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது

* போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது.

கண்கட்டி வராமல் தடுக்கவும் அதற்கான சிகிச்சை முறைகளும் :

சோப்பு தண்ணீரில் கண்களின் இமைகளை சுத்தம் செய்தல்:

கண்களுக்கு பாதிப்பு இல்லாத லேசான சோப்பு துண்டை தண்ணீரில் கலந்து ஒரு பருத்தி துண்டால் நினைத்து கண் இமைகளை துடைக்க வேண்டும். கறைகள் முழுமையாக போகும் வரை தினமும் இதை செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் கண் இமைகளை தினமும் சுத்தம் செய்வது எதிர்காலத்தில் கண்கட்டி வராமல் தடுக்கும்.

வெதுவெதுப்பான அமுக்கம்:

கண்களுக்கு வெதுவெதுப்பாக அமுக்கம் செய்வது கண்கட்டியில் இருந்து விடுபட சிறந்த வழிமுறையாகும். அமுக்கத்தின் வெப்பமானது சீழ்ழை மேற்பரப்புக்கு கொண்டு வந்து கரைக்கிறது. இந்த முறையால் கண்கட்டியானது இயற்கையாகவே உடையும்.

தொடர்ந்து கைகளை நன்றாக சுத்தம் செய்வது:

நம் கைகளில் இருக்கும் மாசு துகள்கள் கண்களை அடையாமல் இருக்கவும் சுரப்பிகளை அடைக்காமல் இருப்பதற்கும் நம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு கைகளை சுத்தமாக கழுவுதல் கண்கட்டிகளை வராமல் தடுக்கும். ஏற்கனவே இருக்கும் கண்கட்டிகளின் எரிச்சலை குறைக்கும்.

கண்கட்டிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்:

கண்கட்டிகளை தேய்க்கவோ கீறல் செய்யவோ நம் கைகளால் கசக்கவோ கூடாது. இவ்வாறு செய்வது கண்களில் உறுத்தல் பகுதியை திறக்கும்.

இதனால் கண்களின் இமைகளில் புண்கள் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமில்லாமல் கண்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கண்களுக்கு செய்யும் மேக்கப் பழக்கங்கள்

நாம் முகத்திற்கு மேக்கப் செய்வதன் மூலம் கண்கட்டியை மறைக்கலாம். ஆனால் இது கண்கட்டி குணப்படுத்துவதை குறைக்கும். மேலும் அந்த இடத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். மேக்கப் பிரஷ்கள், மேக்கப் பென்சில் பயன்படுத்துவதால் அதிக பாக்டீரியாக்கள் கண்கட்டி இருக்கும் பகுதியில் பரவக்கூடும்.

மேலும் இது முகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேக்கப் பழக்கங்களை குறைத்துக் கொள்வது கண்கட்டி அபாயத்தை குறைக்கும்.

ஆண்டிபயாடிக் கிரீம் பயன்படுத்துதல்

கண்கட்டி நோய் தொற்றுக்கான பாக்டீரியாக்கலை பரவாமல் தடுக்க கண் மருத்துவர் ஆண்டிபயாடிக் கிரீமை பரிந்துரைப்பார். இந்த ஆண்டிபயாடிக் களிம்பு கண்களை வடிகட்ட உதவுகிறது.

அது மட்டுமில்லாமல் நோய்த் தொற்றை பரவமால் தடுக்கிறது. கண்கட்டியானது கடுமையாக அல்லது பரவலாக காணப்பட்டால் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் நுண்ணியிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொள்ளலாம்.

சூடான தேநீர் பைகளை பயன்படுத்துதல்:

தேநீர் பைகளில் காஃபின் மற்றும் ஆன்டிஆக்சிடன்கள் இருப்பதால் இவை கண்கட்டியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்க உதவுகின்றது. மேலும் இந்த தேநீர் பைகள் கண்கட்டியால் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் உதவுகின்றது.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு மசாஜ்:

நன்கு சுத்தமான கைகளை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தை மசாஜ் செய்வது சாயத்தை வெளியேற்றுகிறது. கண்களில் வலி இருந்தால் மசாஜ் செய்யக்கூடாது.

அழுக்கு கைகளால் கண்கட்டிகள் இருக்கும் பகுதியை தொடக்கூடாது. கண்கட்டியில் இருந்து சீழ் வடிந்த பிறகு கண்கட்டி உள்ள இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.