ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?
ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் யோகத்தையும், துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் ஏற்படுகிறது. நம் பிறப்பிலேயே நமக்கு தோஷங்கள் அமைந்து விடுகிறது.
சில தோஷங்களுக்கு பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதும். திருமண தோஷம் ஏற்பட்டால், ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
அதனால்தான் சிலர் தோஷங்கள் நீங்க கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றுவார்கள். ஆனால், எத்தனை தீபம் ஏற்றவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது. நாம் எத்தனை முறை தீபங்கள் ஏற்றுகிறோம் பொருத்து பலன்கள் கிடைக்கின்றன.
சரி வாங்க… எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம் –
சனி தோஷம்
சனி தோஷம் ஏற்பட்டால், 9 தீபங்கள் ஏற்றி கடவுளை வழிபட வேண்டும்.
திருமண தோஷம்
திருமண தோஷம் ஏற்பட்டால், 21 தீபங்கள் ஏற்றி கடவுளை வழிபட வேண்டும்.
ராகு தோஷம்
ராகு தோஷ ஏற்பட்டால், 21 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டால் 21 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
குரு தோஷம்
குரு தோஷம் ஏற்பட்டால், 33 தீபங்கள் ஏற்றி கடவுளை வழிபட வேண்டும்.
சர்ப்ப தோஷம்
சர்ப்ப தோஷம் ஏற்பட்டால், 48 தீபங்கள் ஏற்றி கடவுளை வழிபட வேண்டும்.
புத்திர தோஷம்
புத்திர தோஷம் ஏற்பட்டால், 51 தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்.
களத்திர தோஷம்
களத்திர தோஷம் ஏற்பட்டால், 108 தீபங்கள் ஏற்றி கடவளை வழிபட வேண்டும்.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்