‘தளபதி 68’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் தெரியுமா? இந்த ரோலிலும் இவர் தான்!

Photo of author

By Divya

‘தளபதி 68’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் தெரியுமா? இந்த ரோலிலும் இவர் தான்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’ வருகின்ற அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்பொழுது லியோ படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.இவர் சென்னை 28,சரோஜா,மங்காத்தா,மாநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் முதன் முறையாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் தளபதி 68 படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவி வருகின்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.லியோ படம் திரையரங்குகளில் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஒரு கிராமிய அரசியல் அதிரடி திரில்லராக உருவாக உள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்பொழுது மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.அதன் படி அப்பா,மகன் என்ற இரு வேடங்களில் விஜய் நடிப்பதாகவும் அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும்,மற்றொரு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.இந்நிலையில் தற்பொழுது 3 வேடங்களில் விஜய் நடிக்கிறார்.அதாவது அப்பா,மகன் வில்லன் ஆகிய மூன்று ரோல்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல்
வெளியாகியுள்ளது.