ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Photo of author

By Rupa

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?

முகத்தில் உள்ள அழுக்கு,தூசு,இறந்த செல்கள் அனைத்தும் நீங்க சுத்தமான நீர் கொண்டு முகம் கழுவ வேண்டும்.தினமும் காலையில் எழுவது முதல் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வரை முகத்தை எத்தனை முறை நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

தண்ணீர் அருந்துவது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நீர் பயன்படுத்துவது அவசியம்.ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முறையாவது முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

முகத்திற்கு சோப்,க்ரீம் போன்று எதையும் பயன்படுத்தாமல் வெறும் நீர் மட்டும் பயன்படுத்தி முகத்தை கழுவி வந்தால் முதுமை தோற்றத்தை சில ஆண்டுகளுக்கு தள்ளி போட முடியும்.

குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது.வெயில் காலத்தில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவது நல்லது.முகத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.இல்லையென்றால் முகத்தில் சுருக்கம்,கொப்பளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு விடும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதினால் கொப்பளங்கள் வருவது தடுக்கப்படும்.

தண்ணீர் கொண்டு முகத்தை கழுவுவதால் கிடைக்கும் பழங்கள்:-

1)முகத்தில் உள்ள டெட் செல்கள்,கரும் புள்ளிகள் எளிதில் மறைந்து விடும்.

2)முகச் சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.

3)சருமம் மிருதுவாக இருக்க முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.

4)அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகத்தில் உள்ள கொப்பளங்கள்,வடுக்கள்,வறட்சி நீங்கி முகம் அதிக பொலிவாக காணத் தொடங்கும்.

5)சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தும் சாதனங்களை தவிர்த்து சுத்தமான நீர் கொண்டு முகத்தை கழுவினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.