1993ஆம் ஆண்டு வைகோவின் பேச்சை பார்த்து அவருடன் தன்னை மதிமுக கட்சியில் இணைத்து கொண்டவர் நாஞ்சில் சம்பத். 2012 ஆம் ஆண்டு வரை வைகோவுடன் பயணித்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பம் முதலே வைகோவுடன் பயணித்ததால் வைகோவை பற்றிய எல்லா விஷயங்களும் நாஞ்சில் சம்பத்துக்கு அத்துப்படி.
அந்த வகையில் அண்மையில் வைகோவை பற்றி பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வைகோ பாஜகவிடம் விலை போய்விட்டார் என்றும், அவருடைய மகனுக்கு அமைச்சர் பதவி, 12 சீட்டுகள் பேசி முடிவெடுத்துவிட்டார் என்றும் பேட்டி கொடுள்ளார்.
தன்னுடைய மகன் துரை வைகோவிற்காக மதிமுகவை பாஜகவிடம் வைகோ அடகு வைத்துவிட்டார். மகனின் மந்திரி பதவி தான் முக்கியம் என்று வைகோ யோசித்துவிட்டார். வைகோவிடம் 10000 கோடி சொத்துக்கள் இருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்களை விட மகன் தான் முக்கியம் என்கிற முடிவை வைகோ எடுத்துவிட்டார்.
வைகோவின் சுயநலத்தால் எல்லோரும் மதிமுகவை விட்டு விலகிவிட்டார்கள். மதிமுகவில் இருக்கும் உறுப்பினர்களை வெறும் ரெண்டு மினி பஸ்ஸில் ஏற்றிவிடலாம். மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார், வைகோ மதிமுக கட்சிக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் கூடிய விரைவில் மதிமுகவில் உள்ள எல்லா உறுப்பினர்களும் தங்களை திமுக கட்சியில் இணைத்துக்கொள்வார்கள். அது தான் இங்க நடந்துகிட்டு இருக்கு என்று வைகோவையும், அவருடைய மகன் துரை வைகோவையும் வெளுத்துவிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.