மரவள்ளி கிழங்கை போன்றே சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் பி,மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது.
இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரஞ்சு,பர்பிள்,மஞ்சள்,வெள்ளை போன்ற நிறத்தில் கிடைக்கிறது.நார்ச்சத்து அதிகம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிலர் வறுத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற முழு சத்தும் நீங்கி ஆரோக்கியம் இல்லாத உணவாக மாறிவிடும்.
சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற பாதி சத்துக்கள் போய்விடும்.கிழங்கின் முழு சத்தும் கிடைக்க நீங்கள் அதை ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.
ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.குடல் இயக்கம் மேம்பட நீங்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.
மூளை செயல்பாட்டை அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.குடல் ஆரோக்கியம் மேம்பட சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம்.உடலில் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் ஆற்றல் சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கு உண்டு.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.உடலில் காணப்படும் தேவையற்ற கழிவுகள் அகல சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.
சரும ஆரோக்கியம் மேம்பட சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்கொள்ளலாம்.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனை சரியாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாம்.