நாம் புரதச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும்.முட்டை என்றால் புரதம் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் முட்டையில் வைட்டமின் ஏ,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் பி2,வைட்டமின் பி9.வைட்டமின் ஈ,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.
இளம் வயதினர் முட்டை சாப்பிட்டால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.உடல் தசைகள் வலிமைபெற தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.
கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.உடலுக்கு தேவையான புரதம்,வைட்டமின்கள் கிடைக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.முட்டை சாப்பிட்டு வந்தால் தோற்றம் நீளும்.முட்டையை வறுத்து சாப்பிடலாம் வேகவைத்து சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும்.
கோலின் என்ற சத்து முட்டையில் அதிகமாக நிறைந்திருக்கிறது.முட்டையில் இருக்கின்ற கோலின் என்ற வேதிப்பொருள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மூளையின் செயல்திறன் மேம்பட முட்டையின் கோலின் சத்து உதவுகிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த கோலின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.கோலின் உணவுகள் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்திருக்கிறது.வளரும் பருவத்தினர் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் மூளை வளர்ச்சி மேம்படும்.