ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் சொத்து மதிப்பு தெரியுமா?

Photo of author

By Parthipan K

ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் சொத்து மதிப்பு தெரியுமா?

Parthipan K

Do you know Shah Rukh Khan Manager Salary Property Value?

ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் சொத்து மதிப்பு தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்னும் பெருமதிப்பு பெற்றவர் நடிகர் ஷாருக்கான் ஆவார். ‘அந்தஸ்தில் ரசிகர்களால் கொண்டாடப்படுவர் பாலிவுட் பாட்ஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

உலக அளவில் இப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ஜவான் ஆகும்.

அட்லீ இயக்கி வரும் அப்டமானது வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்க்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.

அவருடைய மேனேஜர் பூஜா வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நிழலாக செயல்பட்டு வரும் பூஜா வருடத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என்று உறுதியாகியுள்ளது. பூஜா கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் மேனேஜராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.