பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இந்த பிளைட் மோடிற்கான பயன் என்ன என்பது தெரியாமலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லைடல் செல்லும் பொழுது மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்று நினைப்பவர்களும் உண்டு. அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.
பிளைட்டில் பயணம் செய்யும்பொழுது இந்த ஏரோப்ளேன் மோட் ஆன் செய்ய சொல்வார்கள். அதற்குக் காரணம் ஏரோபிளேன் மோட் பயன்படுத்தப்படும் பொழுது wi-fi, ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற எதையும் பயன்படுத்த முடியாது. ஆனால் செல்போனை நம்மால் பயன்படுத்த முடியும்.
அதாவது, செல்போனில் நெட்வொர்க் சார்ந்த வேலைகளை பார்க்க முடியவில்லை என்றாலும் பாடல் கேட்டல், புகைப்படம் எடுத்தல் போன்ற இதர சேவைகளை செல்போனின் மூலம் பெற முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் செல்போனின் உடைய பேட்டரி நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
உங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த பிளைட் மோடை ஆன் செய்துவிட்டு சார்ஜ் போட்டால் வேகமாக செல்போனினுடைய சார்ஜ் நிரப்பப்படும். மேலும் இதனை வெளியில் பயணம் செல்லும் போது ஆன் செய்து வைப்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு செல்போனினுடைய சார்ஜ் குறையாமல் இருக்கும்.
குறிப்பாக, குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் பொழுது இந்த ஏரோப்ளேன் மோடை ஆன் செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகள் தவறுதலாக கூட இணையதளங்களை பயன்படுத்த முடியாது.