கொதிக்கின்ற நீரில் கிராம்பை போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
நமது உடலின் செரிமானத்திற்கு உதவும் பொருட்களில் ஒன்று கிராம்பு. கடினமான உணவுகளை உட்கொண்டாலும் கூட செரித்து விடும். வயிற்றை சுத்தம் செய்வதற்கும் இது உதவுகிறது. அதனால் தான் அசைவ உணவுகளில் பெரும்பாலும் கிராம்பு சேர்க்கப்படுகிறது.
கிராம்பு நீர் தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இதில் 4 கிராம்பை நசுக்கி போடவும். கிராம்பு நல்லது தான் என்றாலும் அதிகமாக பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் நன்றாக கொதி வந்து நீரின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு இந்த தண்ணீரை மிதமான சூட்டில் வடிகட்டி அழுத வேண்டும். இதனுடன் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
காலையில் சாப்பாடு சாப்பிட்டதும் அரை மணி நேரம் கழித்து இந்த நீரை அருந்தலாம். வாரத்தில் மூன்று நாட்கள் குடித்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிராம்பு தண்ணியை எப்போதெல்லாம் குடிப்பது? என்பதைப் பார்ப்போம்.
1. சில பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் வரும் பொழுது அதனுடன் தலைவலியும் சேர்ந்து வரும். அவர்கள் இந்த கிராம்பு நீரை குடித்து வர தலைவலி நீங்கும்.
2. உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சீரற்ற ரத்த ஓட்டம் கூடியவர்கள் இந்த கிராம்பு நீரை குடித்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
3. இந்த கிராம்பு நீரை வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்து வர இதயத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியமாக மாறும்.
4. சில பேர் செரிமான பிரச்சினையால் மிகவும் அவதிப்படுவோர் இந்த கிராம்பு நீரை குடித்து வர செரிமான பிரச்சனை நீங்கும்.
5. பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கிராம்பு நீர் உதவுகிறது. இந்த நீரை குடித்து வர பற்களின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும். பல் வலி எல்லாம் பறந்து போகும். பல்வலி உள்ளவர்கள் ஒரு கிராம்பை எடுத்து வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.
4. கல்லீரல் சுத்தமாக இந்த பானம் பயன்படுகிறது. மேலும் கல்லீரல் முழு அளவில் செயல்பட உதவுகிறது.
5. கிராம்பு நீரை குடித்தாலே சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உணர்வர். நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
6. கிராம்பு நீர் எலும்பு தேய்மானத்தை குறைக்க பயன்படுகிறது. எலும்பில் உள்ள எனாமலை பாதுகாத்து ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
7. வயதானவர்களை மூட்டு வலி அதிகமாக தாக்கும். அவர்கள் இந்த கிராம்பு நீரை குடித்து வர மூட்டு வலி குறையும்.