உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

குபேரரர், லட்சுமி தேவி ஆகியோர் கனவில் வந்தால் உங்களுக்கு பண வரவு, தன வரவு அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் செல்வந்தர்களாக உருவெடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
தொழில் நல்ல லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

விநாயகர் கனவில் வந்தால் வேலை கிடைக்கும் என்று அர்த்தம். புதிய தொழில் துவங்க ஆசி கிடைப்பதாக அர்த்தம்.

இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் நமக்கு ஆபத்து நேரப் போகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

சிவ லிங்கம் கனவில் வந்தால் வெற்றியை ருசிக்க போகிறீர்கள் என்று அர்த்தம். சிவ பெருமானின் வாகனம் நந்தியை கனவில் கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று அர்த்தம்.

சிவன் மற்றும் பார்வதியை கனவில் கண்டால் நமக்கு நன்மைகள் நடக்கும் என்று அர்த்தம்.

சிவனின் திரிசூலத்தை கனவில் பார்த்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

கிருஷ்ணரை கனவில் கண்டால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.