கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?

Photo of author

By Divya

கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?

நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது. நாம் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் எல்லாம் நம் குலதெய்வத்திற்கு அடுத்து தான். நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வ வழிபாட்டை மறப்பது நம் தாயை பட்டினி போடுவதற்கு சமம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

1)உங்கள் குல தெய்வத்தை கனவில் கண்டால் உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம். தொழில் செய்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

2)குலதெய்வ கோயிலை கனவில் கண்டால் நீங்கள் மனதில் நினைக்கின்ற காரியங்கள் நல்லபடியாக முடியும் என்று அர்த்தம். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த காரியங்கள், தடை பட்ட காரியங்கள் நடைபெறும் என்று அர்த்தம்.

3)குலதெய்வத்தை வழிபடாதவர்களின் கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று அர்த்தம்.

4)குல தெய்வத்தை வழிபடுவது போன்று கனவில் வந்தால் வெளி வட்டாரத்தில் வெளி வட்டாரத்தில் புகழ் மற்றும் மதிப்பு உயரும் என்று அர்த்தம்.

5)கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.