சிறுதானிய உணவு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

சிறுதானிய உணவு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

Divya

நம் தாத்தா பாட்டி காலத்தில் பின்பற்றி வந்த உணவுப் பழக்க வழக்கங்கள் தற்பொழுது மாறிவிட்டது.அவர்கள் சிறு தானிய கஞ்சி மற்றும் கூழை தான் உணவாக சாப்பிட்டு வந்தனர்.கம்பு,கேழ்வரகு,ராகி போன்ற சிறு தானிய உணவுகள் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.அரிசி உணவை விட பன்மடங்கு சத்துக்கள் சிறு தானியத்தில் நிறைந்திருக்கிறது.

சிறு தானியங்கள்:

*கம்பு *சோளம் *தினை *குதிரைவாலி *கேழ்வரகு *வரகு *சாமை *ராகி

சிறு தானிய ஊட்டச்சத்துகள்:

*புரதம் *நார்ச்சத்து *இரும்பு *பைடிக் அமிலம் *கால்சியம் *பொட்டாசியம் *மெக்னீசியம்

சிறு தானிய உணவுகளின் நன்மைகள்:

1)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

2)உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனையை தடுக்கிறது.

3)நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.உடல் சூடு,இரத்த சோகை,அல்சர்,இடுப்பு வலி,மூட்டு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

4)திணையை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் சூடு பாதிப்பு முழுமையாக தணியும்.கபம் நீங்குவதோடு செரிமானப் பிரச்சனை குணமாகும்.

5)சாமை உணவை உட்கொண்டால் மலச்சிக்கல்,நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.சாமையில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை தீர்க்கிறது.

6)குதிரைவாலியை சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் ஆறும்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

7)வரகு உணவு சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் குறையும்.சளித் தொல்லை,சருமப் பிரச்சனை இருப்பவர்கள் வரகை உட்கொள்ளலாம்.

8)மூட்டு வழி பிரச்சனை இருப்பவர்கள் கேழ்வரகை உட்கொள்ளலாம்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகளை குணப்படுத்துகிறது.

9)கம்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அரிசி உணவை தவிர்த்துவிட்டு சிறு தானிய உணவுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.