தீபாவளி நாளில் எண்ணெய் குளியல் போட காரணம் மற்றும் அதற்கு உகந்த நேரம் எது தெரியுமா?

Photo of author

By Gayathri

சாக வரம் பெற்ற நரகாசுரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாளை தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகின்றோம்.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் எண்ணெய் குளியல் போட்டு புத்தாடை உடுத்தி மகிழும் மக்கள் வீட்டை தீபத்தால் அலங்கரித்து பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.பொதுவாக தீபாவளி நாள் விடுமுறை தினம் என்பதால் பலரும் நேரம் கடந்து எழுந்து குளியல் போடுவராகள்.ஆனால் இந்நாளில் அதிகாலை நேரத்தில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளியல் போட வேண்டும்.இது நாம காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு நல்ல பழக்கம்.

சிலர் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க காரணம் என்னவென்று தெரியாமல் இருப்பர்.நல்லெண்ணெயில் மகா லட்சுமி குடியிருக்கிறார் என்பது ஐதீகம்.அதேபோல் வெதுவெதுப்பான நீரில் கங்கா தேவியும்,சீகைக்காயில் சரஸ்வதியும் வாசம் செய்கிறார்.இந்நாளில் நெல்லெண்ணய் தேய்த்து சீகைக்காய் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளித்தால் அனைத்து தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

எண்ணெய் குளியல் போட உகந்த நேரம்:

அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் அதாவது சூரியன் உதயமாவதற்கு முன்னரே எண்ணெய் குளியல் போட வேண்டும்.

தீபாவளி எண்ணெய் காய்ச்சும் முறை:

சிலருக்கு எண்ணெய் காய்ச்சி தலைக்கு வைத்து வைத்து குளிக்கும் பழக்கம் இருக்கும்.அந்த வகையில் முறையாக எண்ணெய் காய்ச்சுவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)சீரகம்
3)நல்லெண்ணெய்
4)இஞ்சி
5)பூண்டு

செய்முறை:

அடுப்பில் ஒரு கப் நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு மிளகு,சீரகம்,ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பல் பூண்டு பூண்டு சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.