இது தெரியுமா? இந்த ஜூஸ் சாப்பிட்டால்.. இரத்த சர்க்கரை அளவு நொடியில் கட்டுப்படும்!!

Photo of author

By Divya

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள ஜூஸ் வகைகளில் ஒன்றை செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)பிஞ்சு பாகற்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:

*முதலில் இரண்டு பிஞ்சு பாகற்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*இந்த பாகற்காய் ஜூஸை தினம் ஒருவேளை பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

தேவையான பொருட்கள்:

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)கற்றாழை துண்டு – ஒன்று
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:

*இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

*பிறகு ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

*இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய நெல்லிக்காய் துண்டுகள் மட்டும் கற்றாழை ஜெல்லை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*இந்த பானத்தை தினம் ஒரு கிளாஸ் பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு எந்நேரத்திலும் கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)கொய்யா பழம் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:

*கொய்யா பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*இந்த கொய்யா சாறை பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:

1)கொய்யா இலை – இரண்டு
2)வெற்றிலை – ஒன்று
3)வேப்பிலை – ஒரு கொத்து

தயாரிக்கும் முறை:

*முதலில் இரண்டு கொய்யா இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

*பிறகு ஒரு கொத்து வேப்பிலையை உருவி வைத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொய்யா இலை,வேப்பிலை மற்றும் வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து வடித்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.