பணத்தை வாரி குவிக்கச் செய்யும் இந்த ஒரு பரிகாரம் தெரியுமா?

Photo of author

By Divya

பணத்தை வாரி குவிக்கச் செய்யும் இந்த ஒரு பரிகாரம் தெரியுமா?

இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்தையும் பணம் இல்லாமல் தொடங்க முடியாது. இந்த பணத்தின் தேவையும் மதிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் செல்கிறது. மனிதர்கள் வாழ்வில் இன்றியமையா தேவையாக உள்ள பணத்தை சேமிக்க பல வழிகள் இருந்தும் ஏதேனும் ஒரு தடையால் அதை சேமிக்க இயலாமல் போகும்.

இவ்வாறு பணத்தடை நீங்கி கட்டு கட்டாக பணம் குவிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்து வரவும்.

இந்த பரிகாரத்தை வாரத்தின் முதல் நாளான ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தவும். அதன் பின்னர் ஒரு கைப்பிடி அளவு பூச்சி வண்டு விழுகாத கொள்ளு பருப்பை எடுத்து ஒரு சிவப்பு நிற காட்டன் துணியில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு சிவப்பு நிற நூலால் மூட்டை போன்று கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை வீட்டு பூஜை அறையில் வைத்து பணத் தடை நீங்கி அதன் வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

அதன் பின்னர் கொள்ளு மூட்டையை எடுத்து தங்களுக்கு தாங்களே சுத்தி போட்டுக் கொள்ளவும். பிறகு இந்த கொள்ளு மூட்டையை யார் காலும் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு செய்தால் பணத் தடை நீங்கி அதன் வரவு அதிகரிக்கும்.