அட இது தெரியுமா போச்சே.. உடலுறவு வைத்துக் கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
103

 

உடலுறவு என்பது வெறும் சுகம் மற்றும் இன்பத்தை மட்டும் கொடுக்க கூடியது என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குபவையாக திகழ்கிறது.

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்,பெண்ணிற்கு மன அழுத்தம்,பதட்டம் ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.உங்கள் துணையுடன் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டால் அது உங்களுக்கிடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்தும்.

அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்படும்.இரத்த ஓட்டம் மற்றும் இதய துடிப்பு சீராக இருக்கும்.அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது அதிகப்படியான மன அழுத்தம் குறையும்.அது மட்டுமின்றி இது ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும்.

உடலுறவில் ஈடுபடுவதால் சிலருக்கு தலைவலி,உடல் வலி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது என்பது ஆய்வில் தெரிய வருகிறது.உடலுறவில் ஈடுபட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு இடுப்பு தசைகளின் வலிமையை இயற்கையாக அதிகரிக்கிறது.அடிக்கடி உடலுறவு கொண்டால் ஞாபகசத்தியை அதிகரிக்கும்.

பாலியல் உறவு கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.ஒரு நல்ல உடலுறவு மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.உடலுறவில் ஈடுபடுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை தடுக்க முடியும்.இன்றைய இளம் தலைமுறையினர் தூக்கமின்மை மற்றும் மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் இது போன்ற பாதிப்புகளில் இருந்து மீள முடியும்.

Previous articleஅல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?
Next articleகர்ப்ப காலத்தில் பெண்களின் உணவுமுறை எப்படி இருக்க வேண்டும்? எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?