மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Photo of author

By Divya

மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Divya

அரிசி வகைகளில் பார்லி ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இதை மருந்தாக எடுத்துக் கொள்கின்றனர்.பார்லி அரிசியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

இந்த பார்லியில் கஞ்சி செய்து பருகினால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.கஞ்சி செய்து குடிக்க நேரம் இல்லாதவர்கள் பார்லி ஊறவைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துவிடும்.

பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:

**எடை குறைக்க விருப்பினால் தினமும் காலையில் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிக்கலாம்.பார்லி நீர் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

**செரிமானப் பிரச்சனை நீங்க பார்லி நீர் பருகலாம்.செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த பார்லி நீர் உதவுகிறது.

**உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக தினமும் ஒரு கப் பார்லி நீர் பருகலாம்.இதய ஆரோக்கியத்தை காக்க பார்லி நீர் குடிக்கலாம்.

**உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க பார்லி நீர் பருக வேண்டும்.கோடை காலத்தில் பார்லி நீர் பருகுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

**இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பார்லி தண்ணீர் பருகலாம்.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த பார்லி நீர் செய்து பருகி வரலாம்.

**அளவிற்கு அதிகமாக பசி எடுக்கிறது என்றால் அதை கட்டுப்படுத்த பார்லி நீர் செய்து பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பார்லி நீர் குடிக்கலாம்.

பார்லி நீர் செய்முறை:

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பார்லி அரிசி சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வைக்க வேண்டும்.

மறுநாள் பார்லி அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து பருகலாம்.