குடல் இறக்கம் எதனால் ஏற்படுது தெரியுமா? இந்த அறிகுறி தெரியுதான்னு செக் பண்ணுங்க!!

Photo of author

By Divya

குடல் இறக்கம் எதனால் ஏற்படுது தெரியுமா? இந்த அறிகுறி தெரியுதான்னு செக் பண்ணுங்க!!

Divya

இந்த காலகட்டத்தில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது.யாருக்கு எப்பொழுது என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது.சர்வ சாதாரணமாக கொடிய நோய்களை இந்த தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.இளம் வயதில் சர்க்கரை நோய்,மாரடைப்பு,உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

இதில் இளம் தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை குடலிறக்க நோய்.இது மோசமான உணவுமுறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த குடலிறக்க நோயை ஹெர்மினியா என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கின்றனர்.

நமது வயிற்றுப்பகுதியில் குடல் என்ற உறுப்பு இருக்கின்றது.இந்த குடல் பகுதி இடத்தை விட்டு கீழ் இறங்கினால் அதை குடலிறக்கம் என்று சொல்கின்றனர்.தற்பொழுது குடல் இறக்க பிரச்சனைக்கு நவீன சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.இந்த குடலிறக்கம் வயிற்றில் எந்த பகுதியிலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த குடலிறக்க பிரச்சனையை பெரும்பாலும் ஆண்களே சந்திக்கின்றனர்.ஆண்களின் அடிவயிறு மற்றும் தொடை இரண்டு பகுதிகளும் சேரும் இடத்தில் குடலிறக்க நோய் ஏற்படுகிறது.வயதாகும் பொழுது இந்த பாதிப்பு அதிகமாகும்.

நமது வயிற்றை சுற்றிலும் இருக்கின்ற தசை பலவீனமடையும் பொழுது குடல் இறக்க பாதிப்பு ஏற்படும்.சில பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு குடலிறக்க பிரச்சனையை சந்திக்கின்றனர்.அதிக எடை தூக்குதல்,உடல் பருமன்,சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனை ஆகிய காரணங்களாலும் குடலிறக்க பிரச்சனை ஏற்படுகிறது.

குடலிறக்க அறிகுறிகள்:

1)வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
2)தொப்புளில் நீர் வடிதல்
3)வயிறு இழுத்து பிடித்தல்
4)வயிற்று வலி
5)மலம் வெளியேற்றுவதில் சிரமம்
6)நெஞ்செரிச்சல்
7)குமட்டல்
8)வாந்தி உணர்வு

குடல் இறக்க பாதிப்பை கவனிக்காவிட்டால் என்னாகும்?

நீங்கள் இந்த பாதிப்பை சரியான நேரத்தில் குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் உடலில் இரத்த ஓட்டம் நின்றுவிடும்,குடல் அழுகி உயிர் போய்விடும்.

குடல் இறக்க சிகிச்சை:

இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும்.குடல் பகுதியில் புடைத்திருக்கும் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் உள்ள தள்ளுதல் அல்லது அவற்றை நீக்குதல் போன்றவை சிகிச்சை மூலம் செய்யப்படும்.