இன்று பெரியவர்கள்,சிறியவர் பாகுபாடின்றி அனைவருக்கும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.கடந்த காலங்களில் குறைந்த நபர்களே இந்த மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது பின்பற்றப்படும் உணவுமுறையால் பெரும்பாலனோர் மலச்சிக்கல் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:
1)நார்ச்சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.குடற் வறட்சி காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது.
2)மூலம்,உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.செரிமானப் பிரச்சனையை சந்திப்பவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது.
3)நீர்ச்சத்து குறைபாட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.
மலச்சிக்கலை குணப்படுத்தும் வீட்டு மருத்துவ முறைகள்:
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு (அ)
பழுப்பு உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – 100 மில்லி
செய்முறை விளக்கம்:-
படி 01:
ஒரு கிண்ணத்தில் கருப்பு அல்லது பழுப்பு உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவிட வேண்டும்.
படி 02:
பிறகு உலர் திராட்சையை மண்,தூசு இன்றி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
படி 03:
பிறகு ஊறவைத்த திராட்சையை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
படி 04:
பிறகு இந்த உலர் திராட்சை பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
நாட்டு மருந்து கடையில் பனங்கிழங்கு பொடி கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.விருப்பம் இல்லாதவர்கள் பனங்கிழங்கை அவித்து காயவைத்து பொடியாக்கி வைத்து பயன்படுத்தலாம்.
படி 02:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
படி 03:
பிறகு அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைத்து பருக வேண்டும்.இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.