தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐடிஐயை கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகள் தான் கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரீசியன், பெயிண்டர், பிட்டர்,பிளம்பர், போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய படிப்புகளை துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் ஆலோசனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன்படி இந்த காலத்திற்கு ஏற்றவாறு தேவையான வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் மூன்று புதிய பாடப்பிரிவுகள் புதிதாக துவக்கப்பட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி
1. மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
2. ரேடியாலஜி டெக்னீசியன்
3. ஏர்க்ரப்ட் மெயின்டனன்ஸ்
போன்ற அசத்தலான 3 படிப்புகளை புதிதாக துவக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் உள்ள கிண்டியில் செயல்படும் அரசு சார்ந்த ஐடிஐ, திருவான்மியூர் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் கணேசன் திடீரென ஆய்வு நடத்தினார். இந்த தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகம் கூறியுள்ளது.