இன்று என்ன நாள் தெரியுமா..??

0
179

“கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”
என்றார் ஔவையார்.

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வறுமை மட்டும் மாறாமல் தொடர்கிறது. உலகில் உள்ள பல நாடுகளில் மக்கள் வறுமையினால்  வாடுகின்றனர். ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்கு கீழ் வாழும் மக்களைஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்று சொல்லலாம்.

வறுமையின் காரணமாக பல மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வறுமையினால் வாடும் மக்கள் பலரின் மூளைத்திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. வறுமையின் காரணமாக நாட்டின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மக்களின் தேவை மற்றும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பதை முக்கியமான இலக்காக வைத்துள்ளனர்.

உலக வறுமை ஒழிப்பு தினம் (International Day for the Eradication of Poverty) ஆண்டுதோறும் அக்டோபர் 17ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பின்னர், உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous articleஎம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
Next articleஇன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!