எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன். 

ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேர்தலில், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால்  இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது ரவீந்திரநாத் குமார் அவர்கள் தன் மீது தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஏனெனில் மிலானியின் குற்றப்பத்திரிக்கையில் “ஓட்டுக்காக ரவீந்திரநாத் குமார் பணம் பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்”. இந்த வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்த நீதிபதி எம் எஸ் ரமேஷ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

“எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருக்கின்றது என்றும் ரவீந்திரநாத் குமாரின் மீது தொடுக்கப்பட்ட தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் எம்.பி.ரவீந்திரநாத் குமார் தன் மீது தொடுக்கப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எஸ் ரமேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.