சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.இரத்த சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது சர்க்கரை அளவு அதிகரித்தாலோ பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிபட்டால் புண்கள் ஆற வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும்.உடலில்
சர்க்கரை அளவு அதிகரித்தால் எடை குறைந்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் உணவு முறையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்:
கிவி,கொய்யா,நாவல்,பிளம்ஸ் போன்ற பழங்களை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளலாம்.இந்த பழங்கள் குறைவான அளவு கிளைசெமிக் குறியீட்டு அளவை கொண்டிருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாத பழங்கள்:
1)தர்பூசணி
வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தர்பூசணி பழம் உட்கொள்ளப்படுகிறது.இந்த தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.இவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்த்து கொள்வது நல்லது.இதில் இருக்கின்ற அதிகப்படியான சர்க்கரை சத்து இரத்த சர்க்கரை அளவையை அதிகரிக்கச் செய்துவிடும்.
2)வாழைப்பழம்
இந்த பழத்தில் அதிகளவு கிளைசெமிக் குறையீடு இருக்கிறது.இந்த வாழைப்பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
3)அன்னாசி பழம்
அதிக சுவை நிறைந்த அன்னாசி பழத்தை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.
4)மாம்பழம்
இந்த பழத்தில் சுக்ரோஸ் அளவு அதிகமாக இருக்கிறது.மாம்பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
5)திராட்சை
புளிப்பு,இனிப்பு சுவை நிறைந்த திராட்சை பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.இதுபோன்ற இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.