விமான நிலையத்தில் கனிமொழி எம்.பிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியுமா.!?

Photo of author

By Parthipan K

திமுக வின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வருகைபுரிந்த போது சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது எனக்கு இந்தி தெரியாது தமிழ்,ஆங்கிலம் தான் தெரியும் அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார் அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா ?என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியிடம் எனக்கு இந்தி தெரியாது என்னிடம் தமிழிலோ அல்லது இந்தியிலோ பேசுங்கள் என்று நான் கூறியபோது அவர் உடனே நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பினார். இந்தி தெரிந்திருந்தால் இந்தியர் என்பது எப்போதிலிருந்து ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.