குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் முதலில் என்ன நடக்கும் தெரியுமா??

Photo of author

By Rupa

குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் முதலில் என்ன நடக்கும் தெரியுமா??

Rupa

Do you know what happens first when children eat camphor??

குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா??

தினசரி பூஜை செய்யும் பொழுது தீபாராதனை காட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதனை சற்று கவனமாக கையாள வேண்டும். இரண்டு முதல் மூன்று வயது உடைய குழந்தைகள் வீட்டில் இருக்கும் சிறு பொருள்களை கூட எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்கள். அப்படி குழந்தைகள் கற்பூரத்தை கற்கண்டு என நினைத்து வாயில் போட்டுக் கொண்டால் பேராபத்தை சந்திக்க கூடும்.

அப்படி குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா??

கற்பூரமானது கேம்பர் என்ற நச்சு பொருள் சேர்ந்துதான் உருவாக்கப்படுகிறது. அப்படி அதை குழந்தைகள் சிறிதளவில் சாப்பிட்டால் கூட உயிருக்கே ஆபத்தாக கூடும். இதை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு உடனடியாக மயக்கம் அல்லது வலிப்பு ஏற்படும். அதன் பின் சுயநினைவையே இழக்க நேரிடும். எந்த அளவிற்கு குழந்தை சாப்பிட்டார் என்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். வீட்டில் கற்பூரம் மற்றும் இதர் பொருட்களை வைக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை.