இந்த ஒரு வைட்டமின் உங்கள் உடலில் குறைந்தால் என்னாகும் தெரியுமா? உடனே இதை செய்யாவிட்டால் விபரீதமாகிவிடும்!!

Photo of author

By Divya

இந்த ஒரு வைட்டமின் உங்கள் உடலில் குறைந்தால் என்னாகும் தெரியுமா? உடனே இதை செய்யாவிட்டால் விபரீதமாகிவிடும்!!

Divya

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின்.இந்த வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.உடல் சீராக இயங்க வைட்டமின் பி12 அவசியம் தேவைப்படுகிறது.

இந்த வைட்டமின் DNA மற்றும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.வைட்டமின் பி12 இரத்த சோகை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.நம் நரம்பு செல்கள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்
பி12 அவசியமாகிறது.

இந்த வைட்டமின் பி12 நாளொன்றில் 2.4 கிராம் அளவிற்கு தேவைப்படுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வைட்டமின் பி12 அதிகமாக தேவைப்படுகின்றது.இந்த வைட்டமின் குறைபாடு பிரச்சனை எந்த வயது உள்ளவர்களுக்கும் ஏற்படும்.குறிப்பாக 60 வயதை கடந்தவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது.

40 வயதிற்குள் இருக்கும் சுமார் 3 சதவீத நபர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை சந்திக்கின்றனர்.அதேபோல் 60 வயதிற்குள் இருக்கும் நபர்களில் சுமார் 4 சதவீத மக்கள் இந்த குறைபாட்டை அனுபவிக்கின்றனர்.60 வயதை கடந்தவர்களில் 6 சதவீத நபர்களுக்கு இந்த குறைபாடு ஏற்படுகிறது.

வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்:

1)இரத்த சோகை
2)இரைப்பை அலர்ஜி
3)செரிமானப் பிரச்சனை
4)உடல் வலி
5)நகம் சிதைதல்
6)சருமப் பிரச்சனைகள்
7)இரத்தம் உறைதல்
8)கண் பார்வை குறைபாடு
9)நரம்பு வலி,நரம்பு புடைப்பு,நரம்பு வீக்கம்

வைட்டமின் பி12 உணவுகள்:

அசைவ உணவுகளான ஆட்டிறைச்சி,கோழி இறைச்சி,மீன்,முட்டை போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது.

பால் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி12 சத்து நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் சோயா மற்றும் சோயா பொருட்களான சோயா சீஸ்,சோயா பன்னீர்,சோயா பால் போன்றவற்றில் வைட்டமின் பி12 நிறைந்து காணப்படுகிறது.

முழு தானிய உணவுகள்,ஈஸ்ட் உணவுகளில் வைட்டமின் பி12 அதிகளவு நிறைந்திருக்கிறது.பார்லி புல்,கடல் பாசி,சுருள் பாசி போன்றவற்றில் வைட்டமின் பி12 சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.

பாலடைக்கட்டை,ப்ரோக்கலி,அவகேடோ போன்றவற்றிலும் வைட்டமின் பி12 நிறைந்திருக்கிறது.இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.