இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்!

0
139
Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!
Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.தற்போது வரை அதன் தாக்கம் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என அதிகரித்து கொண்டே இருக்கிறது.மக்களும் அத்தொற்றிலிருந்து மீண்டுவருவதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.அதேபோல அரசாங்கமும் மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்தவகையில் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர்.இந்த தடுப்பூசி செலுத்துவதில் பல இடங்களில் தவறுகள் ஏற்பட்டு வருகிறது.அவ்வாறு ஏற்படும் தவறுகளை ஆர்யிசியாளர்கள் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிடுவர்.அந்தவகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேபாளில் சித்தார்த் என்ற மாவட்டம் உள்ளது.அந்த மாவட்டத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வந்தனர்.அவ்வாறு செலுத்தியதில் ஓர் முகாமில் 18 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி கோவிட் ஷீல்டு செலுத்தினர்.

அதனையடுத்து அந்த 18 பேருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்தும் போது  கோவிட் ஷீல்டு  பதிலாக கோவேக்சின் தடுப்பூசி மாற்றி போடப்பட்டுள்ளது.இவ்வாறு தடுப்பூசியை மாற்றி போட்டதால் ஏதேனும் உடலில் பிரச்சனை உண்டாகுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் எவ்வாறு தடுப்பூசியை மாற்றி போடலாம் என்று கேள்வியையும் கேட்டனர்.அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.இந்திய ஆராயிச்சி நிறுவனமான ஜி.எம்.ஆர் இதனை சோதிக்க முன்வந்தது.

இந்த சோதனையில் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை மாற்றி போட்டுக்கொண்ட 18 போரையும் சோதித்தனர்.இவர்களோடு கோவிட் ஷீல்டு இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட 40 பேரையும்,கோவாக்சின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட 40 பேரையும் சேர்ந்து ஆய்வு நடத்தினர்.அப்பொழுது தான் மூவரின் உடலில் நிகழும் மாற்றங்களையும் கண்டறிய முடியும்.இந்த ஆராயிச்சியானது மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் நிறைவடைந்தது.

ஆரயிசியின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.அதாவது கோவிட் ஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் மற்றும் கோவேக்சின் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை விட இரண்டு தடுப்பூசியும் கலந்து போட்டுகொண்டவர்களின் உடலில் அதிகளவு எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது என கூறியுள்ளனர்.இந்த ஆராய்ச்சியின் முடிவானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

Previous articleஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்!
Next articleநான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு!