வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Divya

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்றுதான் வெண்டைக்காய்.இந்த காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.வெண்டையில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் உடலுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வெண்டை நீர் நன்மைகள்:

1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வெண்டை நீரில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண்டை நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.முடி ஆரோக்கியம் மேம்படும்.வெண்டையில் உள்ள வைட்டமின் சி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

3)செரிமானப் பிரச்சனை சரியாக வெண்டை நீரை தினமும் பருகலாம்.வெண்டை ஊறவைத்த நீர் குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

4)வெண்டையில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.வெண்டைக்காய் ஊறவைத்த நீர் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.வெண்டைக்காய் நீர் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெண்டைக்காய்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காய் எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதன் கம்பு பகுதியை நீக்கிவிட வேண்டும்.

அடுத்து ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி வெண்டைக்காயை அதில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.காலையில் எழுந்ததும் இந்த வெண்டை நீரை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருக வேண்டும்.