நம் உடல் ஆரோக்கியத்தில் வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது.வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தயத்தை ஊறவைத்த சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.
வெந்தயத்தின் பயன்கள்:
செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடலாம்.வயிறு பிடிப்பு,வயிறு வீக்கம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் வெந்தயத்தை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வெந்தயம் உட்கொள்ளலாம்.
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும்.ஆனால் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
அதிக வெந்தயம் தரும் ஆபத்துக்கள்:
1)வெந்தயம் அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்துவிடும்.சிறுநீரில் துர்நாற்றம் வீசுத் தொடங்கும்.
2)ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டாம்.அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள்வெந்தயம் உட்கொள்ள வேண்டாம்.
3)அதிகமாக வெந்தயம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்.இருமல்,மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் அதிகளவு வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும்.
4)அதிகளவு வெந்தயம் சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் வீசக் கூடும்.அதிக வெந்தயம் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
5)அளவிற்கு அதிகமாக வெந்தயம் உட்கொண்டால் உடல் சோர்வு,வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
6)வெந்தயத்தை சரியான அளவில் உட்கொள்ளவில்லை என்றால் நிச்சயம் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.