இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

Photo of author

By Divya

இரவில் உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு உறங்கினால் என்னாகும் தெரியுமா?

Divya

தினமும் மூன்றுவேளை உணவு சாப்பிடும் வழக்கத்தை நாம் கொண்டிருக்கின்றோம்.காலையில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அதேபோல் இரவில் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆனால் நாம் உணவு பழக்கத்தையே மாற்றி வருகின்றோம்.நேரம் கடந்து சாப்பிடுதல்,இரவில் தூங்கும் நேரத்தில் வயிறு நிரம்ப சாப்பிடுதல் போன்ற தவறான பழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.சிலர் இரவு நேரத்தில் பிரியாணி,பரோட்டா போன்ற உணவுகளை உட்கொள்கின்றனர்.இதனால் செரிமான ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

நம் முன்னோர்கள் இரவில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை.ஆனால் இன்று இரவு நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சொக்கிவிடுகின்றனர்.இது தூக்கம் இல்லை உண்ட மயக்கம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.உணவு சாப்பிடாமல் உறங்குவதுதான் சிறந்தது என்பதை நம்
முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

இரவில் உணவு உட்கொள்ளாமல் உறங்குவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)நாம் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் படுத்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.இரவில் சாப்பிடாமல் உறங்கும் பொழுது நமது செரிமான அமைப்பிற்கு ஓய்வு கிடைக்கும்.இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

2)இரவில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும்.

3)இரவில் உணவு உட்கொள்ளவில்லை என்றால் வளர்சிதை மாற்றத்தின் ஆரோக்கியம் மேம்படும்.இரவு நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

இருப்பினும் பசியை கட்டுப்படுத்த முடியாதவர்கள் இரவில் 7 மணிக்குள் உணவு உட்கொள்ளலாம்.சிலருக்கு இரவு உணவு உட்கொள்ளவில்லை என்றால் உடல் சோர்வு,மயக்கம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரவு உணவை தவிர்க்க முடியாதவர்கள் அதை 7 மணிக்குள் உட்கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.