இதனை பெண்கள் அந்தரங்க பகுதியில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா.. கட்டாயம் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்!! 

Photo of author

By Rupa

பெண்கள் தாங்கள் பூப்படைந்த பின்னர் வரும் ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாயை சந்திக்கின்றனர்.பாட்டி காலத்தில் மாதவிடாய்க்கு காட்டன் துணி பயன்படுத்தப்பட்டது.அதன் பிறகு நாப்கின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்தது.இதனால் துணி பயன்படுத்தும் பழக்கம் குறையத் தொடங்கியது.

ஆனால் இன்றும் கிராமப் பகுதியில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர்.தற்பொழுது நாப்கினுக்கு மாற்றாக பெண்கள் மாதவிடாய் கோப்பை அதாவது மென்சஸ் கப்பை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இது மாதவிடாய் சந்திக்கும் பெண்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இது சிலிக்கான் மற்றும் லேடெக்ஸ் ரப்பரால் செய்யப்பட்ட நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருளாகும்.

இந்த மென்சஸ் கப்பை பயன்படுத்துவதற்கு முன்னர் 20 நிமிடங்கள் சுடு நீரில் போட்டு வைக்க வேண்டும்.பிறகு இதை பயன்படுத்த வேண்டும்.இந்த மென்சஸ் கப்பை பிறப்புறுப்பில் வைப்பதற்கு முன்னர் கை சுத்தத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாப்கின் போன்று இரத்தத்தை உறிஞ்சாமல் இந்த மென்சஸ் கப் உதிரப்போக்கை சேமிக்கிறது.ஒருமுறை வாங்கிய மென்சஸ் கப்பை அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

நாப்கின் பயன்படுத்துபவர்களுக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.ஆனால் மென்சஸ் கப்பை அதிகபட்சம் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.மாதவிடாய் கோப்பையை பிறப்புறுப்பில் சரியாக பொருத்தினால் இரத்தம் கசியாது.

மென்சஸ் கப்பை சரியான் அளவு பார்த்து வாங்கினால் பயன்படுத்துவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது.மென்சஸ் கப்பை பொருத்துவதில் இருக்கும் பொறுமை அதை பிறப்புறுப்பில் இருந்து அகற்றுவதிலும் இருக்க வேண்டும்.துணி,நாப்கினை காட்டிலும் மென்சஸ் கப் மாதவிடாயை சௌகரியமாக்குகிறது.