மனிதர்களுக்கு தூக்கம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கத்தை அவசியம் அனுபவிக்க வேண்டும்.தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்.
நம் வாழ்வில் தூக்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.அப்படி இருக்கையில் நாம் தூக்க நிலையில் இருக்கும் பொழுது பல்வேறு செயல்களை நம்மை அறியாமலேயே செய்கின்றோம்.குறட்டை விடுதல்,ஜொள்ளு விட்டு தூங்குதல் போன்ற விஷயங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்கின்றனர்.அதேபோல் சிலர் வாய் திறந்த நிலையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
வாயை திறந்த நிலையில் தூங்குபவர்கள் சரியாக மூச்சுவிட சிரமப்படுகின்றனர் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நாசி வழியாக மூச்சு காற்றை வெளியேறுவதற்கு பதில் வாய் வழியாக வெளியேற்றுகின்றனர்.
நாம் வாய் திறந்து தூங்கினால் நமது பல் ஆரோக்கியம் மோசமாகிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வாயை திறந்த நிலையில் வைத்திருந்தால் பாக்டீரியாக்கள்,கிருமிகள் எளிதில் நுழைந்து பல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
வாய் திறந்த நிலையில் தூங்குபவர்களுக்கு குறட்டை பாதிப்பு ஏற்படலாம்.வாய் திறந்த நிலையில் தூங்குபவர்களுக்கு இருமல்,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.தூங்கும் பொழுது வாய் திறந்த நிலையில் இருந்தால் எளிதில் பாக்டீரியாக்கள் வாய்க்குள் நுழைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
மல்லாக்க படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு ஒருபக்கம் சாய்ந்த நிலையில் படுத்து உறங்கும் பொழுது வாய் திறப்பது கட்டுப்படும்.எனவே இனி வாய் திறந்த நிலையில் தூங்குவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது நல்லது.