நீங்கள் பல் துலக்குவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
147
Do you know what happens when you stop brushing your teeth? Must know!!
Do you know what happens when you stop brushing your teeth? Must know!!

வாயில் உள்ள அழுக்கு கிருமிகள் நீங்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் தினமும் பல் துலக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் மட்டும் பல் துலக்குவார்கள். சிலர் காலை மற்றும் இரவு என இரு நேரங்களிலும் பல் துலக்குவார்கள்.

ஆனால் குழந்தைகளுக்கு பற்களை துலக்குவது பிடிக்காத விஷயமாக இருக்கும். இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு பல் சொத்தை,பற்சிதைவு,வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களில் சிலரும் பற்களை துலக்காமல் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு பற்களை துலக்காவிட்டால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் மாதக்கணக்கில் பற்களை துலக்காமல் இருந்தால் வாய் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

நீங்கள் பற்கள் துலக்குவதை நிறுத்தினால் வாயில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகளவு பரவி பல் ஈறுகளை பாதிக்கச் செய்துவிடும். நீங்கள் 48 மணி நேரத்தில் பல் துலக்கவில்லை என்றால் வாயில் பாக்டீரியாக்கள் பரவி துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். அது மட்டுமின்றி இந்த பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றால் அது வயிறு ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்துவிடும்.

நீங்கள் சரியாக பல் துலாக்காவிட்டால் பற்களில் உணவுத் துகள்கள் படிந்து கறையை ஏற்படுத்தும். ஒருவர் தொடர்ந்து பல் துலக்காமல் இருந்தால் ஈறுகளில் வலி, வீக்கம் ஏற்படும். ஈறுகளில் அலர்ஜி ஏற்பட்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

சரியாக பல் துலாக்காவிட்டால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். இதனால் ஈறுகளில் இரத்த கசிவு, துர்நாற்றம் போன்றவை உண்டாகும்.எனவே தினமும் ஒருமுறையாவது பற்களை துலக்க வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் தண்ணீரில் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இது போன்று வாய் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி வந்தால் பல், ஈறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிவிடலாம்.

Previous articleதாங்க முடியாத தோல் அரிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!
Next articleஉச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து விரட்டும் ஆயில் எது தெரியுமா?