உலகில் மிகப்பெரிய 4 ஆவது ரயில்வே அமைப்பாக இந்தியன் ரயில்வே விளங்கி வருகிறது. பொதுவாக ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. ரயிலில் பயணம் செய்யக்கூடிய பலருக்கு ரயில்வே என்னுடைய விதிகள் முழுவதுமாக தெரிந்திருப்பதில்லை. அந்த விதிகள் குறித்தும் ரயில் பயணத்தின் பொழுது என்ன மாதிரியான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்கள் எடுத்த செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் :-
✓ அடுப்புகள்
✓ எரிவாயு சிலிண்டர்கள்
✓ எரியக்கூடிய ரசாயனங்கள்
✓ பட்டாசுகள்
✓ கடுமையான வாசனை கொண்ட பொருட்கள்
✓ தோல் அல்லது ஈரமான தோல்
✓ எண்ணெய்
✓ சிகரெட்
✓ வெடிக்கும் பொருட்கள்
✓ உலர்ந்த தேங்காய்
விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை :-
✓ ரயில் பயணத்தின் பொழுது ரயிலில் பயணிக்க கூடிய பயணிகள் மது அருந்தி இருந்தால் அவர்களுடைய ரயில்வே டிக்கெட் ரத்து செய்யப்படுவதோடு அவர்களுக்கு 6 மாதகால சிறை தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டிருப்பது ரயில் பயணியின் தவறு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சாத்திய கூறாக அமையும்.
✓ அதேபோன்று ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி அழைத்து செல்லவில்லை என்றால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
✓ ஏசி கோச் முதல் வகுப்பில் இருக்கக்கூடியவர்களுக்கு சில சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.