அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு கீழ் பகுதியில் உணர்ச்சி மற்றும் வலி தெரியாமல் இருக்க முதுகெலும்பு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இது அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் மருந்தாகும்.
இந்த மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு இடுப்புக்கு கீழ் மரத்து போதல் ஏற்படுகிறது.இதனால் அறுவை சிகிச்சையின் போது எந்தஒரு உணர்வும் ஏற்படாது.இந்த முதுகெலும்பு மயக்க மருந்து பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது.
மூட்டு அறுவை சிகிச்சை,பிரசவம்,இடுப்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை,கால் எலும்பு அறுவை சிகிச்சை போன்றவை செய்வதற்கு முன்னர் முதுகெலும்பு தண்டு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இந்த முதுகெலும்பு தண்டு மயக்க ஊசி செலுத்தப்படுவது பாதுகாப்பானது என்றாலும் இதனால் உடலுக்கு பெரிய ஆபத்துக்களும் ஏற்படும்.
முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
1)மயக்க ஊசி செலுத்திய பிறகு தலைவலி வருதல்
2)மயக்க ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம் மற்றும் வலி வருதல்
3)நரம்புகளில் கடுமையான சேதம் ஏற்படுதல்
4)இரத்தக்கசிவு ஏற்படுதல்
5)சிலருக்கு மயக்க ஊசிக்கு பின்னர் நரம்பு பகுதியில் செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு
6)உடல் பாகங்களில் உணர்வின்மை
7)சளி,இருமல்,உடல் சோர்வு அதிகரித்தல்
8)வாந்தி,மயக்கம் ஏற்படுதல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மயக்க ஊசி செலுத்துவதால் உங்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனை ஏற்படும் என்பது தெரிந்தால் நீங்கள் சம்மந்தப்பட்ட மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகு மருத்துவர் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.மயக்க ஊசியால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.மயக்க ஊசி செலுத்திய பிறகு இடுப்பு பகுதியில் அதிக வலி மற்றும் அசைய முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.