நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா?
நவராத்திரி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. நவராத்திரியில் 9 நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 9 நாட்களில் அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். அப்படிசெய்யும்போது நன்மை சேரும்.
சரி வாங்க நவராத்திரியில் அம்மனை எப்படி வணங்க வேண்டும் என்று பார்ப்போம் –
நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். 9 இரவுகள் மற்றம் 10 பகல்கள் கொண்டது நவராத்தி காலமாகும். 10வது நாளில் விஜயதசமி அல்லது தசராவாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நவராத்திரிகளில் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியையே மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு நவராத்திரி வரும் 15ம் தேதி தொடங்கி அக்டோபர் 23ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
நவராத்திரியில் 9 நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நிறம் உரியதாகும். இந்த நாட்களில் அந்தந்த நிறங்களில் அம்மனையும், வீட்டையும் அலங்கரிப்பதுதான் மிகவும் விசேஷம்.
9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணித்து வழிபட வேண்டும் என்று பார்ப்போம் –
நவராத்திரியின் முதல் நாளில் அம்மனை ஷைலபுத்திரியாக வழிபட வேண்டும். முதல் நாளில் சாம்பல் நிற உடையால் அம்பிகையை அலங்கரித்து வழிபட்டால் மிகவும் நல்லது.
2ம் நாளில் துர்க்கையை, பிரம்மச்சாரினியாக நினைத்து ஆரஞ்சு நிற வஸ்திரங்களை அணிவித்து வழிபட வேண்டும்.
3ம் நாளில் அம்மனை சந்திரகாந்தா ரூபமாக நினைத்து வெள்ளை நிற வஸ்திரங்கள், வெள்ளை நிற பூக்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.
4ம் நாளில் அம்மனை கூஷ்மாண்டா தேவியாக நினைத்து சிவப்பு நிறத்தால் வஸ்திரம், பூக்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி அம்மனை வழிபட வேண்டும்.
5ம் நாளில் ஸ்கந்த அம்மனாக நினைத்து குழந்தை முருகனை கையில் ஏந்திய ரூபத்தில் அன்னைக்கு நீல நிற பொருட்களை பயன்படுத்தி அலங்கரித்து வழிபட வேண்டும்.
6ம் நாளில் அம்மனை காத்யாயனியாக நினைத்து மஞ்சள் வஸ்திரங்கள், மலர்கள், மஞ்சளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
7ம் நாளில் அம்மனை காலாத்ரி தேவியாக நினைத்து பச்சை நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
8ம் நாளில் அம்மனை அம்பிகையாக நினைத்து மயில் நீலம் மற்றும் பச்சை நிறங்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.