5 கிராம் திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால்.. எந்த நோய் குணமாகும் தெரியுமா?

Photo of author

By Divya

5 கிராம் திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால்.. எந்த நோய் குணமாகும் தெரியுமா?

Divya

நெல்லி,தான்றிக்காய் மற்றும் கடுக்காய் கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.

திரிபலா சூரணம் நன்மைகள்:

1)செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்ய திரிபலா சூரணம் பருகலாம்.

2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திரிபலா சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிடலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய் கட்டுப்பட திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

3)உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க திரிபலா சூரணம் செய்து பருகலாம்.வயிற்றுப்போக்கு பாதிப்பு குணமாக திரிபலா சூரண பானம் செய்து பருகலாம்.

4)சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் மற்றும் முடி உதிர்வு பாதிப்பு சரியாக திரிபலா சூரண பானம் பருகலாம்.

5)மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள திரிபலா சூரணம் செய்து சாப்பிடலாம்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க திரிபலா சூரணம் சாப்பிடலாம்.

6)கண் பார்வை திறன் அதிகரிக்க,உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க திரிபலா பொடியில் பானம் செய்து பருகலாம்.

7)உடலில் எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக திரிபலா சூரணத்தை சாப்பிடலாம்.

திரிபலா சூரண பானம் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் – 20 கிராம்
2)பெரிய நெல்லிக்காய் – 20 கிராம்
3)தான்றிக்காய் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் கடுக்காய்,உலர்ந்த பெரிய நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை திரிபலா சூரணம் என்று சொல்வார்கள்.இதை சலித்து டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.