கோயில் தீர்த்தத்தில் சேர்க்கப்படும் துளசி இலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பல உடல் நலப் பிரச்சனைக்கு இந்த மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக சளி பாதிப்பு குணமாக துளசி இலைகளையே மருந்தாக பயன்படுத்தி வருகின்றோம்.
துளசி இலையில் கஷாயம் வச்சி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் நான்கு துளசி இலைகளை பறித்து சாப்பிட்டாலே உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
துளசி இலையின் ஆரோக்கிய நன்மைகள்:-
1)இருமல்,சளி பாதிப்பில் இருந்து மீள துளசி இலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
2)ஆஸ்துமா பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.தொண்டைப்புண் பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்.
3)அஜீரணக் கோளாறு பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை உட்கொள்ளலாம்.வெறும் வயிற்றில் துளசி சாப்பிட்டால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
4)இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க துளசி இலைகளை தினமும் சாப்பிடலாம்.துளசி இலைகள் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.
5)வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் பாதிப்புகள் குணமாக துளசி இலைகளை சாப்பிடலாம்.நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை சாப்பிடலாம்.
6)சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.தினமும் காலையில் துளசி தேநீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துளசி தேநீர் செய்முறை:
தேவைப்படும் பொருட்கள்:
துளசி
தேன்
தண்ணீர்
முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் பத்து துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் துளசி பானத்தை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து பருகலாம்.