பாலில் இருந்து தயாரிக்கப்படும் முக்கிய உணவுப் பொருள் தயிர்.அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகமாக உட்கொள்ளும் உணவுகளில் ஒன்றாக தயிர் உள்ளது.பசும் பாலில் இருந்து கிடைக்கும் தயிரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
தயிரில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.தயிரில் புரோபயாடிக் அதிகமாக இருப்பதால் குடல் சார்ந்த பிரச்சனைகளால் அவதியடைபவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிடுவதால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.
அல்சர் புண்களை குணப்படுத்தும் அருமருந்தாக இது திகழ்கிறது.வீட்டு முறையில் தயிர் செய்து உட்கொண்டால் அதிகமான பலன் கிடைக்கும்.இரத்த கொதிப்பு,இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் தயிரை உட்கொண்டால் அந்த பாதிப்பு சீக்கிரம் சரியாகும்.
தயிர் உணவுகளை உட்கொண்டால் உடல் எடை குறையும்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் தயிரில் வெந்தயத் தூள்,பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடலாம்.
அல்சர் புண்களை குணப்படுத்த தயிரில் மணத்தக்காளி காய் பொடியை கலந்து உட்கொள்ளலாம்.சருமம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்திக் கொள்ள தயிர் உட்கொள்ளலாம்.எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தயிர் உட்கொள்ளலாம்.தயிரில் இருக்கின்ற கால்சியம் மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.
பற்களின் வலிமையை அதிகரிக்க தயிர் உணவுகளை உட்கொள்ளலாம்.உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க தயிரை உட்கொள்ளலாம்.நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க தயிர் சாப்பிடலாம்.
தயிரில் இருக்கின்ற மெக்னீசியம் சத்துக்கள் உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.தயிரில் இருக்கின்ற கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் கீல்வாத பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் ஒரு கப் தயிர் உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிடுவதால் இதய நோய் அபாயம் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தயிரில் இருக்கின்ற நுண்ணுயிரிகள் வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.வயிறு உப்பசம் இருப்பவர்கள் தயிரில் பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடலாம்.
தயிரில் இருக்கின்ற புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.தயிரில் இருக்கின்ற புரோபயாட்டிக் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.எனவே தினசரி உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.