பிரண்டை வேர் எந்த நோய்க்கு மருந்தாகிறது தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Gayathri

கிராமப்புறங்களில் செழிப்பாக வளரும் மூலிகையான பிரண்டை மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை பலரும் அறிந்திருப்பீர்.அதேபோல் பசியின்மை இருந்தால் பிரண்டை இலையில் துவையல் செய்து சாப்பிடலாம் என்பது சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

உண்மையில் பிரண்டை முந்நூறுக்கும் அதிகமான நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.பிரண்டை தண்டு கணுக்கால் வீக்கம்,எலும்பு சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

மூட்டு பகுதி பலவீனமாக இருந்தால் வலி,குடைச்சல் ஏற்படும்.இதனால் நீண்ட தூரம் நடப்பது,ஓடுவது,வேகமாக நடப்பது போன்ற எந்த ஒரு செயலையும் செய்ய இயலாமல் போகும்.எனவே மூட்டுகள் சார்ந்த பாதிப்புகளில் இருந்து மீள பிரண்டையை நல்லெண்ணெயில் காய்ச்சி தைலம் போல் பயன்படுத்துங்கள்.

பிரண்டை இலையை கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் இறந்து வெளியேறிவிடும்.வாயுக் கோளாறு இருப்பவர்கள் பிரண்டையை நறுக்கி கால் லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் பலன் கிடைக்கும்.

அதேபோல் பிரண்டை செடியின் வேரை அலசிவிட்டு அம்மியில் பசைபோல் அரைத்து இரத்தக்கட்டு மீது பூசி கட்டு கட்டினால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.எலும்பு தேய்மானப் பிரச்சனை இருப்பவர்கள் பிரண்டையில் சூப் செய்து பருகலாம்.பிரண்டை உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தபட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.